உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வாகரை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று புதன்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் குறித்த இராணுவ முகாம் காவலரணில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.குறித்த காவலரணில் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கந்தளாய் ஜயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.எம். நளீன் சஞ்சீவ (வயது 34 வயது) என்றழைக்கப்படும் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

சிப்பாய் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய சிப்பாய்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிப்பாயின் சடலம் உடற் கூறாய்வுக்காக வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப் படை முகாமிலிருந்து துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்