உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடக்கு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ஜேர்மனிய துருப்புகள் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை சுட்டுக்கொன்றது. இன்னொருவர் காயமடைந்தார் என ஆப்கானிஸ்தான் பொலிசார் கூறினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள குண்ட்டுஸ் மாகாணத்தில் உள்ள சகார் தாரா மாவட்டத்தில் புதன் அன்று ஜேர்மனி துருப்புகள் மீது தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஜேர்மனி வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒர் பெண் உயிரிழந்தார். குண்ட்டுஸ் மாகாண ஜேர்மனி துருப்புகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டின்ன்ட் கர்னல் க்ளாஸ் கெய்ர் கூறுகையில் துருப்புகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்றார்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக முகாமிட்டுள்ள சர்வதேச துருப்புகளால் பொது மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது என்கிற குற்றச்சாற்று உள்ளது. இந்த பெண் உயிரிழப்பு அந்த குற்றச்சாற்றுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

வான்படைத் தாக்குதல் ஒன்றில் 9 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அயல்நாட்டு துருப்புகளின் யு.எஸ் கமாண்டர் ஜெனரல் டேவிட் பெட்ராஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்