உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒரு கோடி முப்பது இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் இருபதை தனது வயிற்றிற்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஹம்பந்தோட்டை பகுதியை சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தனது வியாபார வேலைகள் நிமித்தம் தெமட்டகொடை பகுதியில் வசிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (15) மாலை சிங்கப்பூரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்திலும், இந்தியாவின் சென்னை நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்திலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தில் சந்தேகநபர்களை ஸ்கோன் பரிசோதனை செய்த போது அவர்களது வயிற்றில் மறைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒருவருடைய வயிற்றில் 12 தங்க பிஸ்கட்களும் இன்னொருவருடைய வயிற்றில் 8 தங்க பிஸ்கட்களும் இருந்துள்ளதுடன் அவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனது உள்ளாடையில் இரண்டு மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஹம்பந்தோட்டை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஆடை விற்பனை நிலைய வியாபாரி என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று (15) முற்பகல் 10.30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

2,034,000 பெறுமதியுடைய 339 கிராம் தங்க நகைகளை குறித்த சந்தேகநபரிடம் இருந்து மீட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்