உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சியும், திருகோணமலையிலும் இடம்பெற்றன.கிளிநொச்சியில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் போரில் மரணமான மக்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அமைப்பின் தலைவரான முருகேசு சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து விசேட ஆத்மசாந்தி வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது, இவ்வழிபாட்டில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை போரில் இறந்த மக்களுக்கு திருகோணமலையிலும் நேற்று மாலை 6.00 மணியளவில் வெளிக்கலை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்