உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்8 கோடி பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் தேர்தல் கணிப்பு தகவல் சேவை நிறுவனம் அனுமதியின்றி திருடியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்து உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருடப்பட்ட தகவல்கள் இறுதியாக நடந்த அமெரிக்க தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் தாமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், இதுபோன்ற தொடர் தகவல் திருட்டுகள் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பானது அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேஸ்புக் தகவல் திருட்டுகளை தடுப்பதற்கான சரியான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 58 கோடி போலி பேஸ்புக் கணக்குகள் அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்