Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிளிநொச்சியில் மதுபான சாலைகளுக்கு பதிலாக தொழிற்சாலைகளை அமைத்து, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரிய பரந்தனில் மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (16.05.2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், மதுபானசாலைகள் அமைக்கப்படுவதால் பெண்கள் , சிறுவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி – பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மதுபானசாலையை அமைப்பதற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளின் பாவனையால் இளைஞர் சமூகம் சீரழிவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்க கூடாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாதர் சங்கப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுபானசாலையை அமைப்பதற்கு எதிரான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கரைச்சி பிரதேச சபை தலைவர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் பிரதேச மக்கள் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்