உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட வேளை, அப்பகுதியல் வந்த வான் ஒன்று அவரை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த படை வீரர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய படை வீரர் எனவும், அவர் திரப்பனே பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திரப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்