உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடன் சமீபத்தில் நடக்க இருந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது. டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இல் உடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும். இப்போது அது நடக்கவில்லை என்றாலும், சில காலத்திற்கு பின்னர் நடக்கலாம். சிங்கப்பூர் சந்திப்பு வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் இது வேலை செய்யாது என்பதல்ல. ஆனால், ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது.

என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக இது தொடர்பாக பேசிய டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடியிருந்தார். சீனா இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து வடகொரியாவை மடை மாற்றியிருக்கலாம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்