உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ் கோண்டாவில் பகுதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(26-05-2018) சம்பவித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் சென்றவர் வீதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் பின்னால் சென்று மோதுண்டு விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்