உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் உள்நாட்டு பயணிகள் விமானம் செயின்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.

போதை அதிகமானதால் தர அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் பாத்ரூம் சென்ற அவர் வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.

அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.

இதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்