உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா – கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் நேற்று இரவு நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றுக்கு பட்டா வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள், வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அத்துடன் வீட்டில் இருந்த சுமார் 7இலட்சம் பெறுமதியான பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டினுள் ஜன்னல் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத கைக்குழந்தையை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியதனால் குழந்தைக்கு எதுவித பாதிப்புமின்றி தப்பித்துள்ளது.

காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்