உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கொக்குவில் மேற்கு காந்திஜி பிரதேசம், மற்றும் அதனை அண் டிய பகுதிகளில் நேற்று இரவு வாள் வெட்டு குழுக்களிடையே மோதல் நடைபெற்றதால் அப்பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பதற்ற நிலை காணப்பட்டது.
அதனையடுத்து சம்பவ இடத்தி ற்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகை தந்து நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

நேற்று பகல் குறித்த பகுதியில் இரு குழுக் களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் நேற்று பகல் முழுவதும் நீடித்த நிலையில், ஒரு குழுவினர் வெளி இட ங்களை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதிக்குள் 10க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்வெட்டு குழுவை சேர்ந்தோர் வந்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதிக்குள் மேலும் பத ற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் இவ்வாறான ஒரு பதற்றநிலை ஏற் பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகைதந்து நிலை மைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து நிலைமைகள் கட்டுக்குள் வந்திருந்தது. சம்பவம் தொடர்பில் இன்றைய தினமும் விசாரணைகள் தொடரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்