உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒடிசாவில் 75 வயது மாமியாரை அவரின் மருமகள், ரோட்டில் தரதரவென இழுத்து செல்லும் காட்சி காண்போரையும் கலங்க வைத்துள்ளது.மருமகளை மாமியார் கொடுமை படுத்தியது ஒரு காலம் என்றால், தற்போது மருமகள்கள் தான் மாமியாரை அதிகம் கொடுமை செய்து வருகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவும் வயதான மாமியார்களை சில மருமகள்கள் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி மனிதநேயன் என்பது அனைவர் மத்தியிலும் மழுங்கி வருகிறதோ என நினைக்க வைக்கிறது.

சமீப காலமாக இணையத்தில் இதுப்போன்ற வீடியோக்கள் அதிகளவில் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவ தொடங்கியது. அந்த வீடியோ ஓடிசாவில் உள்ள தாள்பள்ளி என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.

வீடியோவில், மருமகள் ஒருவர் தனது 75 வயது மாமியாரை நடு ரோட்டில் வைத்து தரதரவென இழுத்து செல்கிறார். வலி தாங்க முடியாத அந்த மூதாட்டி அலறி துடிக்கிறார். அவரின் கால்களில் விழுந்து கெஞ்சியும் பார்க்கிறார். ஆனால் அதை எதையுமே கண்டுக்கொள்ளாத அந்த கொடூர மருமகள் முடிந்த வரை அந்த மூதாட்டியை இழுத்து செல்கிறார்.

அதன் பின்பு ரோட்டில் கூட்டம் கூடி விடுகிறது. இதனைப்பார்த்த பின்பு அந்த மூதாட்டியை அங்கையே விட்டு செல்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து மூதாட்டியை மீட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்