Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



G7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு நாடுகள் இணைந்து நடத்தும் G7 மாநாட்டில் எட்டாவதாக ரஷ்யாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கேட்டுக் கொண்டதற்கு இதர நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

முக்கியமாக கனடா ரஷ்யாவை சேர்ப்பதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. அது மட்டுமின்றி வரி விதிப்பு விவகாரங்களிலும் கனடா மீது அமெரிக்க அதிபர் கோபமாக இருந்தார்.
இந்நிலையில் G7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றும்போது, நம்மை யாரும் மோசமாக நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

இத்தனையும் சேர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் கோபத்தை அதிகரிக்க அவர் தற்போது கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என்று கூறியுள்ள டிரம்ப், தன்னை விமர்சித்தது தவறு என்றும் தன்னை விமர்சித்ததன் பலனை கனடா அனுபவிக்கும் என்றும் இதனால் கனடா பெரும் செலவை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கனடாவை கடுமையாக விமர்சிக்கும் அதே நேரத்தில் டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட நாள் எதிரியான வட கொரியாவின் அதிபரான கிம்மை புகழ்ந்து தள்ளுவது ஏன் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்