உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் விருந்தளித்து சிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தகவலை பதிவு செய்த நபருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று நடைபெற்றது. அந்த விபத்தில் அவர் காலின் ஒரு பகுதி சேதமடைந்தது. அவர் கால் எலும்புகள் உடைந்து விட்டதால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ”

அதனால் தனது கால்களை நீக்கும் படி அவர் கூறினார். இதையடுத்து, அவரின் காலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. மருத்துவர்களின் அனுமதியுடன் அவர் தனது காலை பதப்படுத்தி வைத்திருந்தார். பின்னர் தனது நண்பர்களை அழைத்து அவர்களுக்கு தனது காலை சமைத்து விருந்தாக அளித்துள்ளார். தானும் அந்த உணவை உண்டார்.

 

இதுகுறித்த அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தது, தற்சமயம் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய காலை தானே உண்டு இவர் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்