உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன்(26) என்ற வீரர் பயிற்சி பெற்று வந்தார்.கடந்த திங்கள்கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர் ரபோன், கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த புகைப்படத்தில், தனது ராணுவ உடைக்குள் ஸ்பென்சர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில், சே குவேராவின் படம் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரை ராணுவத்திலிருந்து நீக்கி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு சற்றும் வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முன்நின்று, தன் கையின் நடுவிரலை உயர்த்தி படமெடுத்ததுடன், ‘ஒன் ஃபைனல் சல்யூட்’ என்று தலைப்பிட்டு அதை இணையதளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு, வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர், தனது தொப்பியின் உள்பகுதியில் ‘கம்யூனிசம் வெற்றிபெறும்’ என எழுதி அந்த படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தன்னை ஒரு புரட்சிகர சோசியலிசவாதி’ என்று கூறும் ஸ்பென்சர் ரபோன், அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள ‘சோசியலிசம் 2018’ மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்