உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில், போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.

உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்