உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன.
ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான்.

ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்