Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் கோட்டைக்குள், 6 ஏக்கர் காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் கோட்டையின் தெற்குவாசல் பகுதியின் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணையுங்கள், வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள், கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்