உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

45 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் இன்று காலை 7.30 மணியளவில் பாகிஸ்தானின் லாஹூரில் இருந்து பாகிஸ்தான விமான சேவைக்கு சொந்தமான PK 186 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 4 கிலோ 180 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்