உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. அதில் 360-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணம் அடைந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அந்நாட்டின் துணை பிரதமர் ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.

ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு துருக்கி அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்