உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார்.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்,விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்,மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடையை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்