உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சென்னை நெசப்பாக்கத்தில் கொடூரமாக மகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. :

கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுரேஷ் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறி இருந்தார்.
துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் பொம்மை துப்பாக்கி ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு மஞ்சுளாவை ஏமாற்றி உள்ளனர்.

இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்