உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள்.எரித்ரியாவைச் சேர்ந்த ஒரு நபர், தான் தன் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால் தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள், தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு அவர்கள் செய்ய வேண்டிய கட்டாய ராணுவ சேவையின்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் அபாயம் இருந்தாலும், நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எரித்ரியாவைப் பொருத்தவரையில், அங்கு பின்பற்றப்படும் ராணுவ சேவையின் காலகட்டம் கணிக்க முடியாதது, சராசரியாக ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை கூட ஆகலாம் என்பதோடு, அங்கு பாலியல் துன்புறுத்தல்களும் சகஜம் என்பதையும் நீதிமன்றம் கவனித்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் நாடு கடத்தலை சட்ட விரோதமானதாக்காது என்று கூறிவிட்டது.

இந்த தீர்ப்பு சுவிட்சர்லாந்தில் தற்காலிக குடியிருக்கும் அனுமதி பெற்று வசிக்கும் 9,400 எரித்ரிய நாட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்து எரித்ரியாவுடன் நாடு கடத்தப்படுவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் செய்திருக்கவில்லை என்றாலும் அதனால் நாடு கடத்தல்கள் சாத்தியமில்லாமல் போகாது என புலம்பெயர்தல் துறையின் மாகாணச் செயலர் Mario Gattiker கூறினார்.

எரித்ரியா அகதிகளின் கட்டாய திருப்பி அனுப்புதல்களை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் தானாக நாடு திரும்புதல் சாத்தியமே என்றார் அவர்.சுவிஸ் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்