உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த சிவா என்று அழைக்கப்படும் 30வயதுடையவர், ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் தற்போது வசித்து வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் பிற்பகல் 2 மணியளவில் எதிர்பாராமல் தவறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சக பணியாளர்கள் இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவ்விடயம் குறித்து உறவினர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவரின் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்