உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பெல்ஜியத்தை வென்று இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதிபெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற மற்றைய அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது.
குறித்த போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே, தமதணியின் கெய்ரான் ட்ரிப்பியர் கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்ததான பிறீ கிக் மூலமாகப் பெற்ற கோல் மூலம் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. எவ்வாறெனினும் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிக் பெற்ற கோல் மூலமாக கோலெண்ணிக்கையை குரோஷியா சமப்படுத்தியது.

இந்நிலையில், போட்டியின் வழமையான நேர முடிவிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்தநிலையில், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் அணியைத் தீர்மானிப்பதற்கு போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

அந்தவகையில், போட்டியின் 109ஆவது நிமிடத்தில் மரியோ மண்டூஸிக் பெற்ற கோலுடன் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற குரோஷியா முதன்முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னராகவே உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸ், தாம் இறுதிப் போட்டிக்கு வந்தது வரைக்கும் தமது முழுமையான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்தலாமலே சிறிது சிறிதாக ஒவ்வொரு போட்டியிலும் தமது திறமை வெளிப்பாட்டை அதிகரித்து தேவையான நேரங்களில் கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

மறுபக்கமாக, குழுநிலைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவை அபாரமாகத் தோற்கடித்ததைத் தொடர்ந்து, இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி என மூன்றிலும் மேலதிக நேரம் வரை சென்றும் அதுவும் இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதியில் பெனால்டி வரை சென்றே இறுதிப் போட்டிக்கு குரோஷியா வந்தடைத்திருக்கின்றது.

அந்தவகையில், பிரான்ஸை விட மேலதிகமாக 90 நிமிடங்கள் விளையாடியே இறுதிப் போட்டியை குரோஷியா அடைந்துள்ளமை காரணமாக அவ்வணியின் வீரர்கள் களைப்படைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

எவ்வாறாயினும் இதுவே குரோஷிய வீரர்களுக்கு நேர்மறையாக அமைகின்ற காரணியாக அமைகின்றது. ஏனெனில், இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் இறுதிக் கட்டங்களிலேயே குரோஷிய வீரர்கள் பிரதியீடு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிறந்த தாங்குதிறனைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

மறுபக்கமாக, இத்தொடரில் ஒரு போட்டியில் கூட பிரான்ஸ் மேலதிக நேரம் வரை சென்ற போட்டியில் விளையாடியிருக்காத நிலையில், நாளை மறுதினம் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமைந்தால், அதை எவ்வாறு பிரான்ஸ் எதிர்கொள்வார்கள் என சந்தேகமாகவுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்