உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவை கண்டெடுக்கப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 05 கிலோவும் 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டிலிருந்து கொண்டுவந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்