உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்வடக்கில் உள்ள பெண்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் கோரியதாக முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அதன் ஒரு அங்கமாக இன்று என்னைச் சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் நான் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு குறித்து தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.

இதனைப் பொலிஸ் மா அதிபரும் ஏற்றுக்கொண்டதோடு தனக்கும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார். அத்துடன் தமிழ்பேசக் கூடிய பொலிஸ் அதிகாரிகளை யாழ்ப்பாணத்தில் கடமையில் அமர்த்துமாறும் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அத்துடன் சில தமிழ் தெரிந்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களை நான் பொலிஸ் மா அதிபரிற்கு வழங்கியுள்ளேன். இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் இடம்பெறும் பல குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்