உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்தனது கணவனின் மேல் உள்ள பிரியத்தால் அவன் இறந்த பின்னும் அவனோடு வாழ முடிவெடுத்த மனைவி, கணவரின் உடலோடு தன்னை புதைத்து கொண்டார்.உக்ரனை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெர்னொபில் மேற்கு உகரைன் நகரம் அருகில் இரண்டு உடல்கள் சமாதியான நிலையில் வெறும் எலும்பு கூடுகளாக கண்டெடுத்தனர்.
அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதான அந்த எலும்புக்கூடுகள் இருந்த நிலை ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.கணவன் உடல் அருகே மிகுந்த காதலோடு அவனது கழுத்தின் பின்புற கைகள் நுழைத்து தோளை அணைத்தபடி அவனது நெற்றியோடு தனது நெற்றியை வைத்து நேர்பார்வை பார்த்தபடி அந்த பெண் இறந்து போயிருப்பதாக எலும்புகளின் படுத்திருந்த வடிவத்தை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பண்டைய உக்ரைன் கலாச்சாரம் மிக மென்மையானது என்றும் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் விய்ய்சோட்ஸ்கியா அல்லது ஒய்சோகோ என்று அழைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்த உக்ரைன் தொல்பொருளியல் நிறுவனம் மீட்பு தொல்பொருள் சேவை டிராஸ்பர்கதியன் கிளை இயக்குனர் டாக்டர் பண்டிரிவிஸ்கை கூறுகையில்

இந்த எலும்புகளின் இருப்பை பார்க்கும்போது ஏற்கனவே இறந்த கணவனை பிரிய மனமில்லாத மனைவி அல்லது கணவனை தனியே வானுலகத்துக்கு அனுப்ப விரும்பாத மனைவி தனது சுய விருப்பத்துடன் தன்னை தானே உயிருடன் புதைத்து இறந்திருக்கலாம் என்று கூறினார்.

இறக்கும் முன்பு வலியில்லாமல் இறப்பதற்காக விஷம் குடித்து அந்த பெண் உயிரோடு சமாதி ஆகியிருக்கலாம் என்று தொல்லியில் நிபுணர்கள் தெரிவித்தனர். அவர்கள் காட்டிய புகைப்படத்தை பார்க்கும்போது இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.

மேலும் பண்டைய கால உக்ரைன் மக்கள் காதல் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு அணுகினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.எத்தனையோ புகைப்படங்களில் வெளிப்படுகின்ற காதல்கள் நேர்மையற்று நீர்த்து போய் விடுகின்ற இந்த சமகாலத்திய காதல்களோடு ஒப்பிடுகையில் கணவனை அணைத்தபடி பத்திரமாக அவனது அருகாமையில் இறந்து போயிருக்கும் இந்த பெண்ணும் அந்த ஆணும் காலங்கள் தாண்டியும் இன்னும் காதலித்தபடியேதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்