உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்திருமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை கடற்கரையில் 5 கிலோ 550 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள், நேற்று (13) மீட்கப்பட்டதென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை 21 பக்கெட்டுகளில் பொதியிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.குறித்த கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதி செய்யப்பட்ட பக்கெட்டுகள் கிடப்பதாக சம்பூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அந்தப் பக்கெட்டுகளை சோதனை செய்த போது, அவற்றுக்குள் ஹெரோய்ன் இருந்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த ஹெரோய்ன் பக்கெட்டுகள் எவ்வாறு கடற்கரையில் காணப்பட்டது என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்