உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் நகைகள் கொள்ளையிட முயன்று அப்பெண்ணின் கழுத்தில் வெட்டி, திருடன் தப்பித்த சம்பவம் ஒன்று யாழ் சண்டிலிப்பாயில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டில் இச்சம்பவம் நேற்றுக் காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றித் தெரியவருவது,

சி.அன்னப்பிள்ளை (வயது 75) என்ற வயோதிபப் பெண் கணவர், பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்கைள் சகிதம் அவ்வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று, அவர்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் வெளியில் சென்றிருந்தனர்.

குறித்த வயோதிபப் பெண் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்ட திருடன் வீட்டினுள் வந்துள்ளான். குறித்த பெண்ணிடம் வீட்டிலுள்ள நகைகள் மற்றும் பணத்தைத் தருமாறு மிரட்டியுள்ளான். அதற்கு அந்தப் பெண் வீட்டில் நகைகள், பணம் ஏதும் இல்லை எனக் கைவிரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற திருடன் தன் உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிய பிள்ளைகள், தாயின் நிலை கண்டு உடனே வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த பெண்மணி சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று முன்தினம் உடுவில் பகுதியிலும் இதேபோன்றதொரு சம்பவம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்