உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது.
அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்து அலறினார்கள். இருந்தும் பதட்டப்படாத விஞ்ஞானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி தரை இறக்கினார்கள்.

எனினும் அந்த விமானம் பால் பண்ணை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இச்சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இத்தனை பதட்டத்துக்கு இடையே பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே இந்த விபத்தில் விமானி மற்றும் தரையில் தொழிலாளர் என 2 பேர் பலியானதாகவும், 2 பைலட்டுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்