உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொழும்பு யாழ் பஸ் சேவை நடத்துநர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் ஆசன முற்பதிவு செய்தும் பிரயாணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

தமது வயது மற்றும் சௌகரியங்களுக்காகவே அதிகாலை வேளையில் பதிவுசெய்யும் நிலையத்துக்குச் சென்று தமக்கு வசதியான ஆசனங்களை முன் பதிவு செய்து கொள்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினால் அங்கே தாம் முன் பதிவுசெய்து வைத்த ஆசனங்களை வேறு பயணிகள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது தெரியவரும்.

இதனை நடத்துநர்களிடம் சுட்டிக்காட்டினால் அதனைக் கருத்தில் எடுப்பதில்லை. இப்படியான ஒரு சம்பவம் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து யாழ்.நோக்கிவந்த தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

யாழ். வாசியான ஒரு பெரியவர் வெள்ளத்தை ஹம்டன் லேனில் உள்ள ஆசன முற்பதிவு அலுவலகத்தில் தனக்கு வசதியான ஆசனத்தைப் பதிவு செய்து பணத்தைச் செலுத்தி அதற்கான ரிசீற்றையும் பெற்றிருந்தார்.

இரவு 8 மணிக்கு மூடை முடிச்சுகளுடன் பஸ்ஸில் ஏறிய பெரியவர் முன்பதிவுசெய்ய அதே ஆசனத்தில் இருந்த ஓர் இளம் ஜோடி தம்மை மறந்து கதைத்துக்கொண்டிருந்தனராம்.

தம்பி மன்னிக்கவேணும். இது நான் பதிவுசெய்த சீற் அதை எனக்குத் தந்தால் உதவியாக இருக்கும் என்று கேட்க, அந்த இளைஞனோ ஐயா இது நடத்துநர் ஒதுக்கித் தந்த சீற் நீங்கள் வேற சீற் பாருங்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் சிறிது சங்கடப்பட்ட பெரியவர் நடத்துநரிடம் போய் தம்பி என்னுடய சீற்றில் இருந்துகொண்டு எழும்ப மறுக்கின்றார் வந்துபாருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நடத்துநர் கூறியது ஏனைய பிரயாணிகளையும் எரிச்சல் கொள்ள வைத்தது.

ஐயா அவர்கள் தான் அந்த சீற்றுக்களுக்குப் புக்கிங் நீங்கள் இப்படி வந்து இங்கே அமருங்கள் என்று (முன் ரயருக்கு மேல்) முன் ஆசனம் ஒன்றில் அமர்த்திவிட்டார்.

அப்போது பொறுமை இழந்த பெரியவர் தம்பி அவர்கள் “புக்கிங்’ என்றால் நாங்கள் எல்லாம் என்ன “இங்” என்று எதுகை மோனையுடன் ஒரு போடுபோட்டார். தொடர்ந்து ஆத்திரம் தீர “அர்ச்சனை’யும் செய்தார்.

என்ன செய்தும் பயன் இல்லை. நடத்துநர் அலட்டிக் கொள்ளவில்லை. பாவம் அந்தப் பெரியவர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்