உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுமார் 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குப்பை வாளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

விமான நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதியை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவரால் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

116 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்கள் இதன்போது மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்