உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


உயிரிழந்த பிலே பிஃப்ட்டு எனும் நபரின் உடலின் மீது படுத்துக்கொண்டு, கெடாயாகால் அய்லீ எனும் அந்த நபர் பிலே எழுந்திரு!’ என்று மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டிருந்தார்.எத்தியோப்பியாவில் ஒரோமியா பகுதியிலுள்ள கலிலீ எனும் சிறு நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பைபிளில், இறந்துபோன லாசரசை ஏசுநாதர் உயிர்தெழச் செய்யும் கதையைக் அய்லீ சொல்லிக் கேட்ட பிலே பிஃப்ட்டுவின் குடும்பத்தினர், அய்லீ பிலேவை உயிர்தெழச் செய்யும் முயற்சிக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

இறந்த பிலேவின் உடல் இந்த சடங்கிற்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அய்லீயின் முயற்சி பலனளிக்காததால், அவர்கள் அவரைத் தாக்கத் தொடங்கினர். சற்று நேரத்தில் தகவல் அறிந்த காவல் துறையினர், அங்கு வந்து அவரை இறந்தவரின் குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்றினர். எனினும், இத்துடன் அய்லீக்கு சிக்கல் முடியவில்லை.

இறந்த உடல்களை தவறாக பயன்படுத்துவது எத்தியோப்பியச் சட்டப்படி குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
சுகாதார பணியாளாரான கெடாயாகால் அய்லீ தற்போது சிறையில் உள்ளார். இறந்த உடலுக்கு அய்லீ உயிரூட்ட முயலும் காணொளி சமூக வளைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்