உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியான சோயாங் மாவட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. உயர் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில், இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. கரும்புகை மூட்டமும் எழுந்தது. இதனால் சக்திவாய்ந்த குண்டு வெடித்திருக்கலாம் என தகவல் பரவியது. சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கரும்புகை எழுந்ததையும், அந்த பகுதியில் போலீசார் கயிறு கட்டி போக்குவரத்தை தடை செய்ததையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

விசா விண்ணப்பங்கள் வழங்குவதற்காக பொதுமக்கள் காத்திருந்த பகுதிக்கு அருகில் குண்டு வெடித்ததாகவும், தாக்குதல் நடத்தியவர் மட்டும் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. தற்கொலைப்படை தாக்குதல் என்றும், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.

ஒரு பெண் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் கரும்புகை எழுந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்