Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்தி திட்டம் உருவாக்கம் பற்றிய விளக்க பட்டறை 12.03.2011 மன்ற மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. கட்டிட கலைஞர் றங்கா அவர்களுடன் அவர்களது உதவியாளர் மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர். இந்த விளக்கபட்டறையில் சுமார் 50பேர் கலந்து கொண்டனர். இதில் மக்களது கருத்துக்கள் பெறப்பட்டன. அவுஸ்ரேலியாவிலுள்ள கட்டிட கலைஞர் சந்திரஹாசன் அவர்களின் முதன்மை திட்ட வரைவை செழுமைப்படுத்தும் வகையில் புதிய வரைவு அமைந்தமையை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இருக்க கூடிய மரங்கள் கிணறு தற்போதைய கட்டிடம் என்பன உள்ளடக்கப்படும் விதமாக மன்ற நிலப்பரப்பை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

புராதனமான கோயில் அதே திசையில் முன்னகர்த்தப்பட்டு தியானம் இருக்கும் வகையில் இரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஞ்சபூதங்களின் சேர்க்கையாக திட்டமிடப்பட்டுள்ளது. முதியோருக்கான ஒன்றுகூடல் அமைவுடன் அதற்கு அருகிலேயே குழந்தைகள் கற்கும் முன்பள்ளியும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். கோயிலையும் மற்றைய அம்சங்களையும் வேறுபடுத்தும் வகையில் மதில் அமைகின்றது. முன் அமைந்துள்ள தற்போதைய நூலகம் தலைமையகமாக மாற்றப்பட்டுள்ளதுடன் பாலர்பாடசாலை நடக்கும் தற்போதைய மண்டபம் பாரம்பரிய பொருட்களை பேணும் அரும்பொருட்காட்சிகமாக மாற்றப்பட்டுள்ளது. விவசாய ஆய்வு மையம் அதனை ஒட்டி சிறு தோட்டம் செய்யும் நிலப்பரப்பு என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியகம் திறந்த வெளியரங்கு உள்ளக அரங்கு என்பனவும் கணனியகம் நூலகம் கைவினைப்பயிலகம் என்பனவும் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கெடுத்த முதியவர்கள் நடுத்தர வயதினர் இளைஞர்கள் சிறுவர்கள் இதனை வியந்து எப்போது எமக்கு கைகூடும் எனும் கனவில் மிதக்கின்றார்கள். கனவு மெய்ப்பட இந்த திட்ட வரைவை கட்டிட கலைஞர் றங்கா அவர்கள் அவரது ஆலோசகர் சந்திரஹாசனுக்கு அனுப்பி வைத்து அவர் அங்குள்ள புலம்பெயர் ஊரவர்களுக்கு இது பற்றி விளக்கமளித்து நிதி சேகரித்து அமைப்பார்கள் என கூறப்பெற்றுள்ளது.

Comments are closed.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்