உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்து வந்தவரை அழைத்துச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மின்சார சபையின் வாகனம் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே இவ்விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்