உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.1939 ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சுற்றுலா பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விமானத்தில் 17 பயணிகள் மற்றும் மூன்று விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.

நாட்டின் தென் பகுதியான டிசினோவுக்கும் ஜூரிக் அருகேயுள்ள டுபென்டரோப் இராணுவ விமான தளத்துக்கும் இடையே இந்த விமானம் பயணித்தது. கடல் மட்டத்தில் இருந்து 8,333 அடி உயரத்தில் இவ்விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

மத்திய சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமை நடந்த மற்றொரு விமான விபத்தில் இரண்டு இளம் குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொல்லப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்