உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் அப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளார்.காயமடைந்த நபரை உறவினர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று பிற்பகல் வீட்டாருடன் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதியில் விறகு வெட்டுவதற்கு சென்ற போது இவர் கண்ணிவெடியில் அகப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

18 வயதுடைய ஜெயம் நிதர்சன் எனும் இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்