உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


திருமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனுராதபுர சந்தியில் வைத்து நேற்று (09) இரவு 3 கிலோ 500 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்பாணத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் தாம் மேற்கொண்ட சோதனையின் போதே இதனை கைப்பற்ற முடிந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரு பெண்களிடம் இருந்தே கேரள கஞ்சாவை கைப்பற்றிய போதும், தமக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்ததகாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாழ்பானத்தில் வைத்து இருவர் இப் பொதிகளை தந்து விட்டதாகவும், திருகோணமலை அனுராதபுர சந்தியில் வருபவரிம் கொடுக்குமாறு தம்மிடம் கோரியதாகவும் குறித்த பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்