உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒரு கிலோகிராம் நிறையுடைய 10 தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு கடத்திவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபா என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

மகபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும், கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 309 மற்றும் யூ.எல். 124 என்ற விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இருவரும் தமது உடையிலும் பயணப் பைகளிலும் இவற்றை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்