உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு செக்கனும்
ஒவ்வொரு நொடியும்
இழந்தவர் முகங்கள்
தொலைத்தவர் முகங்கள்
இதனால் இது நிகழ்ந்ததென
இணைக்க ஒண்ணா கொடுமைகள்
தப்பியவர் கதைகள்
தரித்திரக் கதைகள்

எத்தனை எத்தனை மனிதர்

செத்தனர் செத்தனர் சேர்ந்தே

புத்தரின் வேதம் புரிந்ததுமில்ல

சித்தரின் ஞானம் அடைந்ததுமில்ல

யாரிடமிருந்து யாரென உணரா

விடுதலை மனதில்….

வேண்டாப் பொருட்கள் வந்தன

தாண்டா உறவுகள் வந்தன

கண்டு கொளா புதுமைகள் வந்தன

தொண்டு செயத் தலைப்பட்டோம்

வேண்டாம் இனியொரு நிகழ்வென

வேதனையின் விழிம்பில் மனிதர்

முப்பது ஆண்டுப் பயணம்

முடிவில் இருந்ததை இழந்த கதையை

முதியவர் சொல்லக் கேட்க

எதிலும் விருப்பின்றியே

வதிவது நலமே எனவே

இருப்பமோ இப்படியும்….

எப்படியும் வாழென

இருப்பதே இன்று

இயலுவதாச்சோ

இதிலும் இழிவது அடையா

தெளிவது தெரியக் காண்பமோ

விதிவழியென நோகா

புரிவினில் புகுவமோ

புதியது புகலக் காண்பமோ

சரியிதுவென தேர்வமோ

சமத்துவம் வேண்டிக் கரைவமோ?

 

அழ பகீரதன்

4 Responses to “இப்படியும்….”

 • கனடியத் தமிழ் வானொலியினால் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் 20 நிடங்களுக்குள் வானொலியில் வாசிக்கத்தக்க வகையில் சிறுகதைகளை அனுப்பி வையுங்கள்.
  மின்னஞ்சல் முகவரி: venthanctr@yahoo.ca or venthan@ctr24.com
  http://WWW.ctr24.com
  உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

 • சச்சி:

  புத்தரின் தந்தங்கள் தங்கப்பேழையிலும் அவனுடைய போதனைகள் சவப்பெட்டியிலும் இருக்கின்றன.

 • Ratnarajah:

  நன்றிகள்!! நல்லகவி தந்தமைக்கு நன்றிகள்

 • Sivanantham.S:

  தாயகத்து தமிழ் மக்கள் தவிப்புகளை தத்துரூபமாக கவிவடித்து தந்த நம் தமிழ்க் கவியே!
  உந்தனுக்கு எந்தன் நன்றி கலந்த பாராட்டுக்கள்!.

  வாழ்க உன் சேவை! வளர்க உன் கவித்திறன்! மலர்க மக்கள் மறு மலர்ச்சி!
  நன்றி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்