உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று மதியம் 1.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்