உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும்படம்`கனாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.அவருக்குஅப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்