உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் உடல் நலக்குறைவு காரணமாக 80 வயதில் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 1997முதல் 2006 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்தவர் கோஃபி அன்னன். பிரச்சனைகளை மனிதாபிமான அடிப்படையில் அணுகி தீர்வு கண்டதால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கானா நாட்டைச் சேர்ந்த இவர் 1938, ஏப்ரல் 8ஆம் தேதி பிறந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.கானாவின் குமாசி என்ற இடத்தில் இரட்டையர்களாக கோஃபி அன்னன் பிறந்தார். இவருடன் பிறந்தது சகோதரி. கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்கள் கௌரவமாக கருதப்படுவார்கள்.

கானா நாட்டில் குழந்தைகள் பிறந்த நாளையே அவர்களுக்கு பெயராக சூட்டுவார்கள். அந்த வழக்கப்படி, கோஃபி அன்னாவுக்கு “கோஃபி” (வெள்ளிக்கிழமை அவர்களது மொழியில்) என்று பெயரிட்டனர். இவரது சகோதரி 1991ல் காலமானார்.

இவரது தலைமையில் தான் எய்ட்ஸ் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வர 5 அம்சக் கொள்கை கொண்டு வரப்பட்டது. கட்டமைக்கப்பட்ட அமைதியான உலகை உருவாக்க அன்னன் பாடுபட்டார் என்பதன் அடிப்படையில் டிசம்பர் 10, 2001ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2012ல் ஐக்கிய நாடுகளின் அரேபியக் குழுவில் நியமிக்கப்பட்டார். அக்குழு சிரிய நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 2, 2012ல் அந்தக் குழுவில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்