உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்வெனிசூலாவின் வடமேற்கே யகுவாரேபரோ என்ற பகுதிக்கு 20 கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 126 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பெரிய நகரங்களில் ஒன்றான குமணாவில் வணிக வளாகம் ஒன்றில் மின் படிக்கட்டுகள் கீழே சரிந்து விழுந்து உள்ளன. இதனால் பலர் காயமடைந்துள்ளனர். கராகஸ் நகரில் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து அலுவலக பணியாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் பலர் வெளியேறி ஓடினர்.

கொலம்பியாவின் தலைநகர் பொகட்டாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த 1997ம் ஆண்டில் இதேபோன்ற கடுமையான நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்