உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஈராக்கில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளார். அத்தோடு, 11 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான பஸ்ராவில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவம் தலையீடு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வானவேடிக்கைகளையும் பெற்றோல் குண்டுகளையும் இராணுவத்தின் மீது எறிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.ஈராக்கில் நிலவிவரும் சீரற்ற அரசியல் நிலை, ஊழல், பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் தடைப்பட்டுள்ளமை, கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு மாற்றுவழி செய்யாமை போன்ற காரணங்களுக்காக கடந்த திங்கட்கிழமையிலிருந்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொடர் ஆர்ப்பாட்டத்தில், நேற்றுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு படைப்பிரிவு மற்றும் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் இராணுவமானது, அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் செயற்பட்டு வருகின்றதென்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்