உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்3 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (08) காலை, சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் (6E 1201) பயணம் செய்த ஹட்டனைச் சேர்ந்த 37 வயதான குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

குறித்த நபர், தனது உள்ளாடைக்குள்ளும், சப்பாத்தினுள்ளும் மறைத்து வைத்த நிலையில் சுமார் 100 கிராம் நிறை கொண்ட 31 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த நிலையில், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 3 கிலோ கிராம் (3.191kg) நிறை கொண்ட குறித்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி, ரூபா 2 கோடி 8 இலட்சம் (ரூ. 20,800,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபருக்கு ரூபா ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்