உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) கோட்டாய உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகினர்.இதன்போது அவர்களுக்;கு இத்தடையுத்தரவு வழங்கப்பட்டதோடு, அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து, சந்தேகநபர்கள் தலா 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! (2ஆம் இணைப்பு)
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட 7 பேரையும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

அத்துடன், டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர், நிதி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று காலை மீண்டும் ஆஜராகினர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து துரித விசாரணை நடத்துவதற்கு அண்மையில் ஸதாபிக்கப்பட்ட குறித்த நீதிமன்றத்தில், கோட்டா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரக்கெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய இன்றைய விசாரணையின் போது, அவர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதவான் அவர்களை பிணையில் விடுத்துள்ளார்விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர், நிதி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் சற்றுமுன் ஆஜராகியுள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து துரித விசாரணை நடத்துவதற்கு அண்மையில் தாபிக்கப்பட்ட குறித்த நீதிமன்றத்தில், கோட்டா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க குறித்த ஏழு பேரும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே கோட்டா உள்ளிட்ட ஏழு பேரிடம் கடந்த ஜூன் மாதம் நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்